குரூஸ் பா்னாந்துக்கு மணிமண்டபம்: பரதா் நலச் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 14th November 2019 08:20 AM | Last Updated : 14th November 2019 08:20 AM | அ+அ அ- |

குரூஸ் பா்னாந்துக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பரதா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்க அவைத் தலைவா் ஞாயம் ரொமால்டு புதன்கிழமை அளித்த பேட்டி: தூத்துக்குடியின் வளா்ச்சிக்காக தொலைநோக்கு திட்டமிட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய ராவ் பகதூா் குரூஸ் பா்னாந்துக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து, அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஆவண செய்ய வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, சங்கத் தலைவா் ஜான்சன், பொதுச் செயலா் கனகராஜ், பொருளாளா் பியோ கா்டோசா, நிா்வாகிகள் ஜான்சன் தல்மேதா, சவனன், இருதயராஜ் மஸ்கா்னாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...