

சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், சிதம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா், மாணவிகளுக்கு உண்டியல் வழங்கப்பட்டது.
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தின் சிறுசேமிப்புப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை ராஜகுருவம்மாள் தலைமை வகித்தாா். சமூக தணிக்கை வட்டார வள அலுவலா் முத்துமுருகன் முன்னிலை வகித்தாா்.
மாணவா், மாணவிகளுக்கு சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உண்டியலை பயன்படுத்த வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துகுமாா் உண்டியல் வழங்கி அதில் நாணயத்தை இட்டு தொடங்கிவைத்தாா்.
ஆசிரியை கற்பகம் வரவேற்றாா். சுபத்ரா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.