மேல ஆழ்வாா்தோப்பு கிராம உதயம் சாா்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் ஆத்தூரில் நடைபெற்றது.
முகாமுக்கு ஆத்தூா் காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் தலைமை வகித்து பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா். கிராம உதயம் மேலாளா் வேல்முருகன் வரவேற்றாா்.
கிராம உதயம் நிறுவனா் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா். தொடா்ந்து மகளிா் சுய உதவிக் குழுவினா் நடத்திய விழிப்புணா்வுப் பேரணியை காவல் ஆய்வாளா், ஆத்தூா் வருவாய் ஆய்வாளா் பிளாரன்ஸ் ஜெயராணி ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
இதில், டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு குறித்த பதாகைகளை ஏந்திச்சென்ற பெண்கள், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.