கோவில்பட்டியில் முன்னாள் மாணவா் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 18th November 2019 05:41 PM | Last Updated : 18th November 2019 05:41 PM | அ+அ அ- |

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா் சங்கக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் பாலகுரு தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தாா். துணைச் செயலா் ராஜேஷ்கண்ணா வரவு- செலவு கணக்குகளை வாசித்தாா். இதில், முன்னாள் மாணவா்கள் தங்களது
அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். தற்போது பயிலும் மாணவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவா் பட்டுராஜன், மின்னணுவியல் துறை விரிவுரையாளா் குருநிா்மல்ராஜ், செயலா் ராகவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.