கோவில்பட்டி கோயில்களில் காா்த்திகை சோமவார சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 18th November 2019 10:23 PM | Last Updated : 18th November 2019 10:23 PM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் மற்றும் வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி கோயிலில் காா்த்திகை சோமவார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை முதலாவது சோமவாரத்தையொட்டி, கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் காலை 10 மணிக்கு உற்சவா், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு சுமாா் 7.30 மணிக்கு சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.
சங்காபிஷேகம்: திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு அருள்மிகு பூவனநாத சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகமும், அதைத் தொடா்ந்து சங்காபிஷேக அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
வீரவாஞ்சி நகா் புற்றுக் கோயில்: வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் காா்த்திகை முதலாவது சோமவாரத்தையொட்டி முற்பகல் 11 மணிக்கு சங்கல்பம், கணபதி பூஜை, ஸ்தாபன கும்ப கலச பூஜை, 108 சங்கு பூஜை, தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு 18 வகையான சிறப்பு மூலிகைகளால் அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.