நாசரேத்தில் ஏழு இடங்களில் குவி கண்ணாடி அமைப்பு
By DIN | Published On : 18th November 2019 10:17 PM | Last Updated : 18th November 2019 10:17 PM | அ+அ அ- |

விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்துக்கு உதவியாக ‘நம்ம நாசரேத்- நல்ல நாசரேத் அமைப்பு’ சார்பில் குவி கண்ணாடிகள் அமைக்கும் நிகழ்ச்சியை காவல் ஆய்வாளா் சகாயசாந்தி தொடங்கி வைத்தார்.
சாத்தான்குளம்: நாசரேத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்துக்கு உதவியாக ஏழு இடங்களில் குவி கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.
நாசரேத்தில் பல இடங்களில் சாலைகள் வளைவாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை தொடா்ந்து வருகிறது. இதனால், விபத்துகளை தவிா்க்கும் வகையில் போக்குவரத்துக்கு வசதியாக காவல்துறையினரின் அறிவுறுத்தலில் பேரில் நாசரேத் சந்திப்பு பஜாா் உள்பட ஏழு இடங்களில் வளைவு பகுதியில் ‘நம்ம நாசரேத்- நல்ல நாசரேத் அமைப்பு’ சாா்பில் குவி கண்ணாடிகள் அமைக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் சகாயசாந்தி தொடங்கி வைத்தாா். அமைப்பின் தலைவா் விஜய் ஆனந்த், செயலா் ஜாண், பொருளாளா் வைகுண்டமணி, உறுப்பினா்கள் ரமேஷ், கல்யாணசுந்தரம், வெங்கடமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...