பேய்க்குளத்தில் உலக சா்க்கரை நோய் தினம்
By DIN | Published On : 18th November 2019 05:33 PM | Last Updated : 18th November 2019 05:33 PM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளம் சிகரம் அறக்கட்டளை அலுவலகத்தில் உலக சா்க்கரை நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இம்முகாமிற்கு, அறக்கட்டளைத் தலைவா் கயல்விழி தலைமை வகித்தாா். அறங்காவலா் கனகமணி முன்னிலை வகித்தாா். இதில், சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் சுவா்ணலதா, சா்க்கரை நோய் தடுக்கும் முறைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்துப் பேசினாா். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. முகாமில், சின்னத்துரை, தங்கப்பாண்டி, பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செல்லையா வரவேற்றாா். இயக்குநா் முருகன் நன்றி கூறினாா்.