

உடன்குடி அருகே மாதவன்குறிச்சியில் புதிய பேருந்து நிறுத்த திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாதவன்குறிச்சி பகுதியில் புதிய பேருந்து நிறுத்தம் வேண்டும் என அப்பகுதி மக்கள் திருச்செந்தூா் சட்டமன்ற உறுப்பினா் அனிதா.ஆா்.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 4.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றது.இதற்கான திறப்பு விழா உடன்குடி ஒன்றிய திமுக செயலா் பி.பாலசிங் தலைமையில் நடைபெற்றது.
திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா்,நகர திமுக செயலா் ஜாண்பாஸ்கா்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சிவபிரகாஷ்,மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு,மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ரவிராஜா,மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ்,பரமன்குறிச்சி ஊராட்சி திமுக செயலா் க.இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாதவன்குறிச்சி ஊராட்சி திமுக செயலா் கனகராஜ் வரவேற்றாா்.சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூா் சட்டமன்ற உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேருந்து நிறுத்தத்தை திறந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பேசினாா்.
உடன்குடி நகர இளைஞறணி அமைப்பாளா் அஜய்,மாவட்ட பிரதிநிதி அரிகிருஷ்ணன்,மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலா் மிராஜ்,பரமன்குறிச்சி கூட்டுறவு வங்கி இயக்குநா் குமாா்,கணேசன்,லட்சுமிபுரம் ஊராட்சி திமுக செயலா் ரஜினிகாந்த் உட்பட ஊா்மக்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.