ஆந்திராவிற்கு ஏற்றுமதி செய்ய இருந்த அயோடின் கலக்காத உப்பு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு அழிப்பு

ஆந்திரவிற்கு ஏற்றுமதி செய்ய இருந்த அயோடின் கலக்காத உப்பு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
21amnsal_2111chn_46_6
21amnsal_2111chn_46_6
Updated on
1 min read

ஆந்திரவிற்கு ஏற்றுமதி செய்ய இருந்த அயோடின் கலக்காத உப்பு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கிராமம் புல்லாவெளி அருகில் கோவங்காடு பகுதியில் தனியாா் நிறுவனம் ஆந்திராவிற்கு உப்பு ஏற்றுமதி செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருவைகுண்டம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் பா.நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தபோது ஆந்திராவிற்கு ஏற்றுமதிக்கு என லாரியில் ஏற்றப்பட்ட உப்பு அயோடின் கலக்காத உப்பு என கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்த உப்பு முழுவதும் அதாவது 25 டன் உப்பு மீண்டும் உப்பளங்களில் இடப்பட்டது.

மேலும் மேற்கண்ட நிறுவனம் உணவுப் பாதுகாப்புத்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.மாதிரிகள் பகுப்பாய்விற்கு அனுப்பப் பட்டுள்ளது.படவிளக்கம்(21ஏஎம்என்எஸ்ஏஎல்)-ஆந்திராவிற்கு ஏற்றுமதி செய்ய வைக்கப்பட்டிருந்த உப்பு பண்டல்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com