புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 06th October 2019 02:16 AM | Last Updated : 06th October 2019 02:16 AM | அ+அ அ- |

புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கோளூா் கோயிலில் தாயாா்களுடன் எழுந்தருளிய சுவாமி வைத்தமாநிதி பெருமாள்.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி நதிக் கரையோரங்களில் நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனா், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள், பெருங்குளம் மாயகூத்தா், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதா், இரட்டை திருப்பதி தேவா்பிரான், அரவிந்தலோசனா், திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆகிய நவதிருப்பதி தலங்களில் காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் நெய்விளக்கு தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...