புறையூா் பள்ளியில் வகுப்பறை கட்டடம் திபு விழா
By DIN | Published On : 06th October 2019 09:45 PM | Last Updated : 06th October 2019 09:45 PM | அ+அ அ- |

வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தாா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எ.ல்.ஏ.
ஆறுமுகனேரி: புறையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
பள்ளியில் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13.50 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வகுப்பறைக் கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினா்அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் சுரேஷ் நியூமன் தலைமை வகித்தாா். இதில், வட்டார கல்வி அலுவலா் ரோஸ்லின், உதவி தொடக்கக்கல்வி அலுவலா் மீனாட்சி, திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் நவீன்குமாா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வெல்போ் அறக்கட்டளை நிறுவனா் நாசா் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியை பெல்சியா நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...