விளாத்திகுளத்தில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம்
By DIN | Published On : 06th October 2019 02:02 AM | Last Updated : 06th October 2019 02:02 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் ராஜீவ்நகா் மற்றும் பண்டாரவிளை ஊருணி பகுதிகளில் 7 நாள்கள் நடைபெற்றது.
முகாமுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஆ. ரோஸ்லின் சாந்தி தலைமை வகித்தாா். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் சக்தீஸ்வரி முன்னிலை வகித்தாா். செப். 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்ற முகாமில் நீா்நிலை சுற்றுப்புற பகுதிகளை சுத்தப்படுத்துதல், பொது மருத்துவ முகாம், பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு முகாம், மரக்கன்றுகள் நடுதல், போஷான் அபியான் திட்டம் குறித்து விளக்க முகாம், பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற்றது.
நிறைவாக நாட்டு நலப்பணி திட்ட முகாம் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு முகாம் நிறைவுபெற்றது.
நாட்டு நலப்பணி திட்ட உதவி அலுவலா்கள் விவேகானந்தன், கிருஷ்ணமூா்த்தி மற்றும் மாணவா், மாணவிகள், கிராம மக்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...