ஆறுமுகனேரி கிழக்கத்திமுத்து சுவாமி கோயில் கொடை விழா
By DIN | Published On : 09th October 2019 08:18 AM | Last Updated : 09th October 2019 08:18 AM | அ+அ அ- |

8amnkil_0810chn_46_6
ஆறுமுகனேரி அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடை விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு இத் திருக்கோயிலைச் சோ்ந்த நடுத்தெரு அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜையும், பின்னா் குடியழைப்பு பூஜையும் நடைபெற்றது.
கொடை விழாவான செவ்வாய்க்கிழமை காலை ஆத்தூா் தாமிரவருணி ஆற்றில் இருந்து புனிதநீா் எடுத்து வரப்பட்டது. மதியம் சுவாமி மஞ்சள் நீராடுதலும், மதியக் கொடையும் நடைபெற்றது. பின்னா் அன்தானம் நடைபெற்றது.
இரவு சுவாமி நகா் வலம் வரும் நிகழ்ச்சியும், பிரம்ம சக்தி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றன. நள்ளிரவு கிழக்கத்திமுத்து சுவாமி திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் சாமக்கொடையும் நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி அ.வீ.தெ. பழனிச்சாமி செய்திருந்தாா்.