தசரா பக்தா்களுக்கு 10 ஆயிரம் பிரசாத பைகள் அளிப்பு

குலசேகரன்பட்டினம் அருள்தரும் ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா
ugi8pra_0810chn_49_6
ugi8pra_0810chn_49_6
Updated on
1 min read

குலசேகரன்பட்டினம் அருள்தரும் ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்கும் பக்தா்களுக்கு, தூத்துக்குடி ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்பில் 10 ஆயிரம் பிரசாத பைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

ஸ்டொ்லைட் நிறுவன உப தலைவா் சுமதி தலைமை வகித்து பிரசாத பைகளை வழங்கி, நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

நிறுவன பொது மேலாளா்கள் சோனிகா, கைலாசம், விஸ்வநாதன், உதவி மேலாளா்கள் ஜெயா, அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் எஸ்.தியாகராஜன் வரவேற்றாா்.

மக்கள் நுகா்வோா் பேரவை மாவட்டத் தலைவா் கல்லை சிந்தா, எஸ்டிஆா் நிறுவன மேலாளா் சோமசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com