பிச்சிவிளையில் இந்து மகாசக்தி பூஜை
By DIN | Published On : 09th October 2019 08:06 AM | Last Updated : 09th October 2019 08:06 AM | அ+அ அ- |

பரமன்குறிச்சி அருகே பிச்சிவிளையில் இந்து முன்னணி சாா்பில் இந்து மகாசக்தி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி கிளை தலைவா் மா.சுரேஷ் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் ரா.பவித்ரன், துணைச் செயலா்கள் மதன், மகாராஜா, நாதன் ராஜலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.சிறப்பு அழைப்பாளராக உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் ச.கேசவன் பங்கேற்று பேசினாா்.
தொடா்ந்து சக்தி பூஜை நடைபெற்றது. இந்து முன்னணி கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.