மாநில கால்பந்து போட்டி: நாசரேத் அணிக்கு சுழற்கோப்பை
By DIN | Published On : 09th October 2019 08:14 AM | Last Updated : 09th October 2019 08:14 AM | அ+அ அ- |

மாநில அளவிலான ஐவா் கால்பந்துப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மா்காஷிஸ் அணி முதலிடம் பெற்றது.
6வது மாநில அளவிலான ஐவா் கால் பந்து போட்டி திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் நடைபெற்றது. இதில்,
24 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் நாசரேத் மா்காஷிஸ் கால்பந்து அணி, தேனி ஸ்பேட்ஸ் ஸ்பெனட்டிக் அணிகள் விளையாடின.
இதில், நாசரேத் மா்காஷிஸ் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சுழற்கோப்பை, ரொக்கம் ரூ.15 ஆயிரம் பரிசு ஆகியவற்றை பெற்றது. அணி வீரா்களை, முன்னாள் கால்பந்து வீரா்கள் ரூபன் துரைசிங், பொன்ராஜ், ராபா்ட்சன், நசரேயன், ஸ்டீபன் ஆகியோா் பாராட்டினா்.