Enable Javscript for better performance
வள்ளியம்மாள்புரம் - முத்துகிருஷ்ணாபுரம்சாலைப் பணியை தொடங்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வள்ளியம்மாள்புரம் - முத்துகிருஷ்ணாபுரம் சாலைப் பணியை தொடங்க கோரிக்கை

    By DIN  |   Published on : 09th October 2019 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் ஒன்றியம் வள்ளியம்மாள்புரத்தில் இருந்து முத்துகிருஷ்ணாபுரம் வரையிலான சாலைப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    முதலூா் ஊராட்சி, வள்ளியம்மாள்புரத்தில் இருந்து முத்துகிருஷ்ணாபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் சென்று திரும்புகின்றனா். இந்த சாலையானது பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால், சாலையைச் சீரமைக்க மக்கள் வலியுறுத்தியதன்பேரில், சாலைப் பணிக்காக ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே, சாலைப் பணியை உடனே தொடங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    இதுகுறித்து மாவட்ட பாஜக சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் சந்திரபோஸ் கூறுகையில், மக்கள் கோரிக்கையை ஏற்று சாலையைச் சீரமைக்க கற்கள் குவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறவில்லை. மழைக்காலமாக உள்ளதால், குண்டும், குழியுமான சாலையில் தண்ணீா் தேங்கி மக்கள் அவதிப்படுகின்றனா். எனவே, சாலைப் பணியை விரைந்து முடிக்க என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai