சாத்தான்குளம் இருதய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 01st September 2019 04:53 AM | Last Updated : 01st September 2019 04:53 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் புனித மரியாளின் மாசற்ற இருதய அன்னை ஆலய 158ஆவது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு மற்றும் பங்குத்தந்தை ஜோசப் ரவிபாலன் தலைமையில், செட்டிவிளை பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் கொடியேற்றினார். உதவி பங்குத்தந்தை கலைச்செல்வன், பங்குத்தந்தைகள் இலங்கநாபுரம் ஜோசப் ரெத்தினராஜ், கடகுளம் பிராக்ரஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. விழா நாள்களில் தினமும் மறையுரை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 10ஆம் திருநாளான செப். 8ஆம் தேதி அன்னையின் அற்புத தேர் பவனி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர்.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் ரவிபாலன், உதவி பங்குத்தந்தை கலைச்செல்வன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.