நவீன மீன் விற்பனை அங்காடி அமைக்க மீனவப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 29th September 2019 12:46 AM | Last Updated : 29th September 2019 12:46 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் நவீன மீன் விற்பனை அங்காடி அமைக்க மீனவ பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் நிதி உதவியுடன், நீலப்புரட்சித் திட்டம் (2019-20)இன் கீழ் மீன்வளத் துறையால், இம்மாவட்டத்தில் உள்ள மீனவக் கிராமங்கள், முக்கிய இடங்களில் நவீன மீன் விற்பனை அங்காடி அமைக்க மீனவ மகளிருக்கு 60 சதவீத மானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் கணவரை இழந்த மீனவ மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியுள்ளோர் உரிய ஆவணங்களுடன் தூத்துக்குடி வடக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார் அவர்.