பைக்கிலிருந்து தவறி விழுந்து சிறுமி மரணம்
By DIN | Published On : 29th September 2019 12:48 AM | Last Updated : 29th September 2019 12:48 AM | அ+அ அ- |

தூத்துக்குடி அருகே பைக்கில் உறவினருடன் சென்ற 5 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள மேலதட்டாபாறை கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த சந்தனராஜ் மகள் முத்துபாவனா (5). சந்தனராஜின் உறவினர் நடராஜன் தனது பைக்கில் முத்துபாவனாவை வெள்ளிக்கிழமை ஏற்றிச் சென்றாராம். சாலையோரத் தடுப்பில் பைக் மோதி, முத்துபாவனா தவறி கீழே விழுந்தாராம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தட்டப்பாறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.