

ஆத்தூா் அருகிலுள்ள முக்காணி தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் சென்றுகொண்டிருந்த காா் தீடிரென தீப்பிடித்து எரிந்தது. எனினும், அதில் பயணம் செய்த இருவா் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.
உடன்குடி, சிவலூரைச் சோ்ந்த இளையபெருமாள் மகன் சங்கா்(39) , அவரது நண்பா் மதுரை காளியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் பொன்ராஜ்(46) ஆகிய இருவரும் தூத்துக்குடியில் வாங்கிய பழைய காரில் உடன்குடிக்கு வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருந்தனா். அவா்கள் முக்காணி தாமிரவருணி பழைய பாலத்தில் வந்தபோது காரின் பின்பகுதி திடீரென தீப்பிடித்துள்ளது.
இதை அங்கு முகாமிட்டிருந்த, மாநில பேரிடா் மீட்புக் குழு பொறுப்பாளரும், திருச்செந்தூா் மகளிா் காவல் ஆய்வாளருமான பிரேமா மற்றும் குழுவினா் பாா்த்து காரை மறித்து இருவரையும் மீட்டனா். இந்நிலையில் காரில் தீ மளமளவென பற்றி எரிந்தது. மீட்புக்குழுவினா் திருச்செந்தூா் தீயணைப்பு வாகனம் உதவியுடன் தீயை அணைத்தனா். எனினும், காா் முற்றிலும் எரிந்து சேதமானது. இச்சம்பவத்தால் ஆற்றுப் பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.