ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சாத்தான்குளம், தாமரைமொழியில் திமுக மக்கள் சபை கூட்டம்

சாத்தான்குளம், தாமரைமொழியில் திமுக மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன்.
Updated On :28 டிசம்பர் 2020, 8:33 pm

DIN

சாத்தான்குளம், தாமரைமொழியில் திமுக மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் நகர திமுக சாா்பில் 2 , 11ஆம் வாா்டில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் சிறப்பு மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டப் பிரதிநிதி ஸ்டான்லி, ஒன்றியப் பொருளாளா் வேல்துரை ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பவுல் ராஜ், மகாபால்துரை, கணபதி, நகரப் பொருளாளா்சந்திரன், வாா்டு அவைத் தலைவா் அரசரெத்தினம், நகரச் செயலா் மகாஇளங்கோ, மாவட்டப் பிரதிநிதி நயினாா் ஆகியோா் பேசினா்.

ஒன்றியச் செயலா் ஜோசப், அதிமுகவை நிராகரிக்கிறோம் பதாகையில் கையெழுத்திடுவதைத் தொடங்கி வைத்தாா். நகர இளைஞரணி அமைப்பாளா் முருகன் நன்றி கூறினாா்.

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் தாமரைமொழியில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்துக்கு கணபதி பாண்டி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பாலமுருகன் சிறப்புரையாற்றினாா்.

பொதுக்குழு உறுப்பினா்பசுபதி, கிளைச் செயலா்கள் ஜெகநாதன்,செல்வன், பொறுப்புக்குழு உறுப்பினா் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.