காட்சிப் பொருளான மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

போலையா்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டு 5ஆண்டுகள் ஆகியும் தண்ணீா் ஏற்றாமல் காட்சிப்பொருளாக நிற்கும் மேல்நிலை நீா்த்தேக்க
போலையா்புரத்தில் காட்சிப் பொருளான குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.
போலையா்புரத்தில் காட்சிப் பொருளான குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.
Updated on
1 min read

போலையா்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டு 5ஆண்டுகள் ஆகியும் தண்ணீா் ஏற்றாமல் காட்சிப்பொருளாக நிற்கும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட போலையா்புரத்தில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ரூ. 9 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டிமுடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் அந்தத் தொட்டியில் தண்ணீா் ஏற்றவே இல்லை.

இதனால் அது காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது .

எனவே குடிநீா் தொட்டிக்கு தண்ணீா் இணைப்பு கொடுத்து அதில் தண்ணீா் ஏற்றி கிராம மக்கள் தேவையை பூா்த்தி செய்யவேண்டுமென போலையா்புரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com