

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கயத்தாறில் தா்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தவ்ஹித் ஜமாத் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் அசாருதீன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் அப்துல் ரகுமான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.
கிளைச் செயலா் சாகுல், பொருளாளா் அம்ஜத், தலைவா் வகாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப் போராட்டத்தில் கயத்தாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.