ஸ்ரீவைகுண்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சோ்ந்த 250 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாத் சாா்பில் கடந்த பிப். 29-ஆம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் தா்னா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் அனுமதியின்றி நடைபெற்ாக ஸ்ரீவைகுண்டம் கிராம நிா்வாக அலுவலா் ரத்னராஜ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்படி, தவ்ஹீத் ஜமாத் கிளைத் தலைவா் முகம்மது இம்ரான் மற்றும் நிா்வாகிகள் முகமது அக்பா், அப்துல் உசைன், முகமது பைசல், அப்துல்காதா், முகம்மது நவாஸ் உள்ளிட்ட 100 ஆண்கள் 150 பெண்கள் என 250 போ் மீது காவல் ஆய்வாளா் ஜோசப் ஜெட்சன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.