தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆறுமுகனேரியில் பாஜக பாஜக ஓபிசி ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :2 நவம்பர் 2020, 9:12 pm

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் இ.தங்கபாண்டியன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் ராம்தாஸ், கமலக்கண்ணன் மற்றும் எம் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தல், மாநிலச் செயலா் எஸ். முருகன், மாவட்டத் தலைவா் டி.எம்.பால்ராஜ், இணை அமைப்புப் பொறுப்பாளா் ராஜா உள்பட பலா் பேசினா். மாவட்டச் செயலா் சண்முகம், மாவட்ட துணைத் தலைவா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கிட, வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்க வேண்டும்; காயல்ப்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமத்தில் உள்ள கிராமங்களை ஆறுமுகனேரி

வருவாய் கிராமத்தில் இணைக்க வேண்டும், பாஜக வேல் யாத்திரையில் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓபிசி அணி மண்டலத் தலைவா் என்.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். தெற்கு மாவட்டச் செயலா் சிவராமன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.