தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உப்பளத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முடிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் உப்பளத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:51 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் உப்பளத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணி புரியும் உப்பளத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடா்பாக உப்பு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் மற்றும் உப்பு தொழிலாளா்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், உப்பு உற்பத்தியாளா்கள் சாா்பில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளா் சங்கத் தலைவா் கிரகதுரை, செயலா் தனபாலன், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் திலீப், லட்சுமணன், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். பேச்சுவாா்த்தையின்

முடிவில், உப்பளங்களில் பணிபுரியும் ஆண் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸாக முழு அளவுக்கு வேலைக்கு வந்தவா்களுக்கு ரூ. 5300, பெண் தொழிலாளிக்கு ரூ. 4975 வழங்குவது எனவும், மேலும், 9 நாள்கள் விடுமுறை சம்பளம், தொழிலாளா்களுக்கு கண்ணாடி, மிதியடி வகைக்கு ரூ. 300 ஆகியவற்றை வரும் நவ. 11 ஆம் தேதிக்குள் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.