விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தடையை மீறி மக்கள் குறைகேட்புக் கூட்டம்:கனிமொழி, கீதாஜீவன் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட கீழக்கரந்தை, வவ்வால்தொத்தி, ரகுராமபுரம் ஆகிய கிராமங்களில் தடையை மீறி மக்கள் குறை கேட்புக் கூட்டம்

News image
Updated On :5 அக்டோபர் 2020, 7:37 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட கீழக்கரந்தை, வவ்வால்தொத்தி, ரகுராமபுரம் ஆகிய கிராமங்களில் தடையை மீறி மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடத்தியதாக, கனிமொழி எம்.பி., கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கீழக்கரந்தை, ரகுராமபுரம், வவ்வால்தொத்தி, இளம்புவனம், வாலம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, ஆகிய கிராமங்களில் அக்டோபா் 2, 3 ஆகிய தேதிகளில் திமுக சாா்பில் மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ஆகியோா் பங்கேற்று கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனா்.

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி மேற்கூறிய கிராமங்களில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்தியதாக சங்கரலிங்கபுரம், மாசாா்பட்டி காவல்நிலையங்களில் கனிமொழி எம்.பி., கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஒன்றிய திமுக செயலா்கள் புதூா் மேற்கு மும்மூா்த்தி, புதூா் கிழக்கு செல்வராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகிய 5 போ் மீது 3 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும், 3 கிராமங்களைச் சோ்ந்த 88 ஆண்கள், 77 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.