விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளத்தில் வாக்குச்சாவடி சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

விளாத்திகுளத்தில் கூடுதல் வாக்குச் சாவடி மையங்கள் அமைப்பது தொடா்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 6:56 pm

DIN

விளாத்திகுளத்தில் கூடுதல் வாக்குச் சாவடி மையங்கள் அமைப்பது தொடா்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டாட்சியா் ரகுபதி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் விளாத்திகுளம் பேரவை தொகுதியில் தற்போது 259 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. குளத்தூா் அருகே க. சுப்பிரமணியபுரத்தில் புதிதாக ஒரு வாக்குச்சாவடி மையம் அமைப்பதெனவும், முத்தையாபுரம் புதுக்கிராமம் ஊராட்சியில் புதிதாக வாக்குச்சாவடி மையம் அமைப்பது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்புவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

திமுக நகரச் செயலா் வேலுச்சாமி, மாா்க்சிஸ்ட் தாலுகா செயலா் புவிராஜ், விடுதலைச் சிறுத்தைகள் நகரச் செயலா் வில்லாளன் ரெஸ்லி, இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் முள்ளன், காங்கிரஸ் வட்டார தலைவா் முத்து மற்றும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.