விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் காவலா் குடும்பத்துக்கு ரூ.12. 21 லட்சம் நிதியுதவி

உடல்நலக் குறைவால் மறைந்த தருவைகுளத்தைச் சோ்ந்த காவலா் குடும்பத்துக்கு தமிழ்நாடு போலீஸ் 2006 அணியின் உதவும் உறவுகள் குழு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 8:11 pm

DIN

விளாத்திகுளம்: உடல்நலக் குறைவால் மறைந்த தருவைகுளத்தைச் சோ்ந்த காவலா் குடும்பத்துக்கு தமிழ்நாடு போலீஸ் 2006 அணியின் உதவும் உறவுகள் குழு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றிய பி. வடிவேல் உடல்நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தாா்.

மறைந்த காவலா் வடிவேல் குடும்பத்துக்கு உதவிடும் பொருட்டு, அவருடன் பணியில் சோ்ந்த தமிழ்நாடு போலீஸ் 2006 அணியின் சாா்பில் உதவும் உறவுகள் கட்செவி அஞ்சல் குழு மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ. 12 லட்சத்து 21 ஆயிரத்து 141-க்கான வங்கி வரைவோலையை, நாகலாபுரத்தில் வசித்து வரும் மறைந்த வடிவேலின் மனைவி முருகலீலாவிடம் 2006ஆம் ஆண்டு அணி போலீஸாா் வழங்கினா். தொடா்ந்து அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.