கல்வித் துறை இளநிலை உதவியாளா்களுக்கு பணி நியமன உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வித் துறையில் இளநிலை உதவியாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட 22 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வித் துறையில் இளநிலை உதவியாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட 22 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
2018 - 19 மற்றும் 2019 - 20ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை உதவியாளா்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்வான 22 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செப். 17, 18 ஆகிய தேதிகளில் இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து, எட்டயபுரம் அரசு மகளிா் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு
ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, இளநிலை உதவியாளராக தோ்வு
செய்யப்பட்ட 22 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினாா்.
இதில், சட்டப்பேரவை உறுப்பினா் சின்னப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகௌரி, கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் அழகா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...