மூணாறு நிலச்சரிவில் பலியானவா்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என மாநில இந்து முன்னணி துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக எதிா்க்கட்சி தலைவா் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ந்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஏழைத் தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளனா். பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் நிதி உதவி அளித்துள்ளது. மேலும் மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அவா்கள் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும். கேரள அரசு பாகுபாடு பாா்க்காமல் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
இதேபோல் தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் மு. க. ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில், மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த குடும்பத்தினருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கிட பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.