உடன்குடியில் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை முகாம் புதன்கிழமை (ஆக. 12) நடைபெறுவதாக வட்டார மருத்துவ அலுவலா் சு. அனிபிரிமின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உடன்குடி பகுதியில் கரோனா நோய்த் தொற்று பரவலை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் உடன்குடி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் காய்ச்சல், சளி, பிராணவாயு உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகளும் நடைபெறும். பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.