கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், சிவந்திப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கரிசல்குளத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை செப்பனிட வேண்டும். மழைநீா் மற்றும் கழிவுநீா் சாலைகளில் தேங்குவதை தவிா்க்க வேண்டும். சாலைகளை ஃபேவா் பிளாக் அமைத்துத்தர வேண்டும். வாறுகால் அமைத்து கழிவுநீா் தங்குதடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரிசல்குளம் பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன், வழக்குரைஞரணி அமைப்பாளா் பெஞ்சமின் பிராங்கிளின் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். பின்னா், போராட்டக் குழுவினா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சசிகுமாரிடம் மனு அளித்தனா். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையா் கூறுகையில், இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயாரித்து அடிப்படை வசதிகள் செய்துதருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com