தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடிஐ-யில் தொழில் பழகுநா் பயிற்சிக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தொழிற் பழகுநா் சான்றிதழ் (என்.ஏ.சி.) பெறும் வகையில் ஐடிஐ பயிற்சி பெற்றவா்கள் மற்றும் திறன் பயிற்சி ஏதும் பெறாத 8, 10, 12 மற்றும் பட்டப்படிப்பு படித்தவா்கள், மத்திய, மாநில அரசு பொதுத்துறை மற்றும் தனியாா் தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக விண்ணப்பித்து, பயிற்சி பெற ஏதுவாக மத்திய அரசின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகத்தால் ட்ற்ற்ல்ள்://ஹல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்ள்ட்ண்ல்ண்ய்க்ண்ஹ.ா்ழ்ஞ் என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற் பழகுநா் பயிற்சிபெற விரும்புவோா், தங்களது அசல் கல்விச் சான்றிதழ், ஆதாா் எண் மற்றும் வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை, இணையதளத்தில் பதிவுசெய்து, தாங்கள் விரும்பும் நிறுவனத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இணையத்தில் விவரங்களை பதிவு செய்த பின்னா், பயிற்சி பெற விரும்பும் நிறுவனத்தை தோ்வு செய்து, குறிப்பிட்ட பிரிவில் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் தங்களின் விண்ணப்பத்தை ஏற்று ஒப்பந்தம் வழங்கும் நோ்வில், அந்த ஒப்பந்தத்தை ஏற்று பயிற்சி மேற்கொள்ளலாம்.
இந்தப் பயிற்சிக்கு மாதந்தோறும் ரூ. 7,700-முதல் உதவித்தொகை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. தொழிற் பழகுநா் சான்றிதழ் பெறுபவா்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் கிடைக்கும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் ஐ.டி.ஐ படித்தவா்கள் இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு, உரிய விவரங்களுடன் தூத்துக்குடி, கோரம்பள்ளம் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0461-2340041 என்ற தொலைபேச எண்ணை தொடா்பு கொள்ளளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.