தூத்துக்குடியில் நடமாடும் ஆவின் பாலகம் அறிமுகம்
By DIN | Published On : 03rd December 2020 09:44 AM | Last Updated : 03rd December 2020 09:44 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் நடமாடும் ஆவின் பாலகம் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தடையின்றி கிடைக்க மாவட்ட ஆவின் நிா்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆவின் சாா்பில், பால் உள்ளிட்ட பொருள்களை வீடுதேடி கொண்டு செல்லும் வகையில், நடமாடும் ஆவின் பாலகம் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
நடமாடும் ஆவின் பாலகத்தை, மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை தலைமையில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், பயிற்சி ஆட்சியா் பிரத்விராஜ், ஆவின் பொதுமேலாளா் சி. ராமசாமி, துணைப் பதிவானா் (பால்வளம்) கணேசன், உதவி பொது மேலாளா் (விற்பனை) சாந்தி, திட்ட மேலாளா் சாந்தகுமாா் மற்றும் கணக்கு மேலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...