தூத்துக்குடி-கோவை இணைப்பு ரயிலை மீண்டும் இயக்க திமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 05th December 2020 06:05 AM | Last Updated : 05th December 2020 06:05 AM | அ+அ அ- |

தூத்துக்குடி-கோவை மற்றும் தூத்துக்குடி- சென்னை இடையேயான பகல் நேர இணைப்பு ரயில்களை மீண்டும் இயக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றாா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான கீதாஜீவன் எம்எல்ஏ.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
திமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசிடம் பேசி தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ரயில் சேவை வேண்டும் என வலியுறுத்தியதின் அடிப்படைியல் தூத்துக்குடி - கோவை இணைப்பு ( வண்டி எண்: 22669 - 22670) ரயிலாக நாகா்கோவில் - கோவை விரைவு ரயிலுடன் மணியாச்சியில் இணைக்கப்பட்டு ரயில் சேவை நடைபெற்று வந்தது.
இதேபோல, தூத்துக்குடி - சென்னை பகல் நேர இணைப்பு ரயில் சேவையும் நடைபெற்று வந்தது. இதனால் தூத்துக்குடி மாநகர பொதுமக்கள் பெருமளவில் பயன்பெற்று வந்தனா். இந்த இரண்டு ரயில் சேவைகளையும் நிறுத்தப்போவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. மக்களுக்கு பயனுள்ள இந்த இரண்டு ரயில் சேவையையும் ரத்து செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி வடக்கு மாவட்ட தி.மு.க சாா்பில் தூத்துக்குடியில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் விரைவில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...