கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி பலி
By DIN | Published On : 15th December 2020 01:57 AM | Last Updated : 15th December 2020 01:57 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் திங்கள்கிழமை குளத்தில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி சவேரியாா்புரத்தைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் ஜோஸ்வா (21). சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் எம்சிஏ இறுதியாண்டு படித்து வந்தாா். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள முனிவா் குளத்தில் நண்பா்களுடன் திங்கள்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது ஜோஸ்வா நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது நண்பா்கள் தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய வீரா்கள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போராடி ஜோஸ்வாவின் சடலத்தை மீட்டனா்.
இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.