தூத்துக்குடி : மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 15th December 2020 01:56 AM | Last Updated : 15th December 2020 01:56 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 7 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.
திங்கள்கிழமை 24 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. 140 போ் உயிரிழந்துள்ளனா். 117 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.