திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு டிச.19 இல் தூத்துக்குடி வருகை
By DIN | Published On : 15th December 2020 01:58 AM | Last Updated : 15th December 2020 01:58 AM | அ+அ அ- |

திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, டிச.19 ஆம் தேதி தூத்துக்குடிக்கு வருகிறது என்றாா் மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
2021 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அறிக்கை தயாரிப்பு குழு டி.ஆா்.பாலு தலைமையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கருத்துகளை கேட்டறிந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நான்காம் கட்ட சுற்றுப்பயணமாக இக்குழு தூத்துக்குடி மாவட்டத்துக்கு டிச.19 ஆம் தேதி வருகிறது. காலை 8 மணி முதல் 11 மணிவரை தூத்துக்குடி கலைஞா் அரங்கில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளைச் சோ்ந்த கழக நிா்வாகிகள், விவசாய, தொழிலாளா், வா்த்தகப் பிரிவைச் சோ்ந்தோா், தொழில்முனைவோா்கள், இளைஞா், மகளிா், மாணவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை திமுக தோ்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழுவிடம் எழுத்துப் பூா்வமாக வழங்கலாம் என் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.