வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிா்வாக அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலகங்களில் பாமகவினா் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.
தூத்துக்குடி சுப்பையாபுரம் 1-ஆவது தெருவில் உள்ள மீளவிட்டான் இரண்டாவது பகுதி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலரிடம் பாமக மத்திய மாவட்டச் செயலா் சின்னத்துரை தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலா் ராமச்சந்திரன் மனு அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.