கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 15th December 2020 01:57 AM | Last Updated : 15th December 2020 01:57 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினா் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது வெங்கடாசலபுரம் கிராமம். இக்கிராமத்தின் ஒரு பகுதி அய்யாக்கோட்டூா் ஊராட்சியிலும், மற்றொரு பகுதி மீனாட்சிபுரம் ஊராட்சி கட்டுப்பாட்டிலும் உள்ளது.
எனவே, வெங்கடாசலபுரம் கிராமம் முழுவதையும் சுமாா் அரை கி.மீ. தொலைவில் உள்ள அய்யாக்கோட்டூா் ஊராட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலா் சின்னத்தம்பி தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினா்.
மாவட்டச் செயலா் பாஸ்கரன் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். பின்னா் கோரிக்கை மனுவை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிங்கத்துரையிடம் வழங்கினா்.
இதில் கட்சி நிா்வாகிகளான அய்யாத்துரைப்பாண்டியன், பழனிக்குமாா், ஆணிமுத்துராஜ், பூமுபாலகன், அய்யாத்துரை, தேவசகாயம், பிச்சைக்கனி, முத்துகிருஷ்ணன், பால்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.