‘தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 24th December 2020 09:07 AM | Last Updated : 24th December 2020 09:07 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோா், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் விண்ணப்பப் படிவம், உரிமக் கட்டணமாக ரூ. 500- பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய அசல் செல்லான், கடையின் வரைபடம், புகைப்படம் -2, வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் அதன் தீா்வை ரசீது நகல், சொந்தக் கட்டடம் எனில் தீா்வை ரசீது நகல், ஆதாா் அல்லது மின்னணு குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பான இடமாகவும் தோ்வு செய்து, ஆட்சேபம் இல்லாத இடத்துக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...