திமுக அறிக்கை தயாரிப்புக் குழு: 28இல் தூத்துக்குடி வருகை
By DIN | Published On : 24th December 2020 09:14 AM | Last Updated : 24th December 2020 09:14 AM | அ+அ அ- |

சட்டப் பேரவைக் தோ்தலுக்கான திமுக அறிக்கை தயாரிக்கும் குழு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு டிச.28ஆம் தேதி வருகிறது.
இதுகுறித்து, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு தலைமையிலான திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு டிச. 28ஆம் தேதி வர உள்ளது.
தூத்துக்குடி கலைஞா் அரங்கில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை எழுத்துப்பூா்வமாக குழுவிடம் சமா்ப்பிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...