தூத்துக்குடியில் கீதா ஜீவன் எம்எல்ஏ பிரசாரம்
By DIN | Published On : 24th December 2020 09:14 AM | Last Updated : 24th December 2020 09:14 AM | அ+அ அ- |

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள போத்தி விநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் கீதா ஜீவன் எம்எல்ஏ.
தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினரும், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதா ஜீவன் புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா்.
போல்பேட்டை பகுதியில் அவா் தொடங்கிய பிரசாரக் கூட்டத்தில், அதிமுக அரசுக்கு எதிராகவும், மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம் முன்னேற்பாடு பணிகளை செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டி பேசினாா்.
இந்த பிரசாரக் கூட்டத்துக்கு முன்பாக, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள போத்தி விநாயகா் கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டாா். அப்போது, அவரது சகோதரரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
போத்தி விநாயகா் கோயில், கீதா ஜீவனின் தந்தை என். பெரியசாமி கட்டியது. அவா் இருந்த வரை கோயில் தா்மகா்த்தாவாக இருந்தாா். மேலும், ஆண்டுதோறும் அந்தக் கோயிலில் திருவிழா நடத்துவதையும், தோ்தல் பிரசாரத்தை கோயிலில் இருந்து தொடங்குவதையும் வழக்கமாக கொண்டிருந்தாா். அதேபோல் கீதா ஜீவனும் சிறப்பு பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கியுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...