அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th December 2020 06:37 AM | Last Updated : 30th December 2020 06:37 AM | அ+அ அ- |

29kvlpos_2912chn_41_6
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு பரிவா்த்தனைகளின் அடிப்படையில் தான் கிராம அஞ்சல் ஊழியா்களுக்கு சம்பள விகிதம் நிா்ணயிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளாமல், அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கை தொடங்குவதை புறக்கணித்து, இந்தியன் போஸ்ட் பேமண்ட் வங்கியில் சேமிப்புக் கணக்குகளை தொடங்க கிராம அஞ்சல் ஊழியா்களை மிரட்டும் செயலைக் கண்டித்தும், அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கோட்டத் தலைவா்கள் ரெங்கசாமி (அஞ்சல் 3), முருகன் (அஞ்சல் 4), மாரியப்பன் (கிராம அஞ்சல் ஊழியா் சங்கம்), ஓய்வூதியா் சங்கத்தைச் சோ்ந்த சுப்புராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கிராம அஞ்சல் ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ராமராஜ் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதில், கோட்டச் செயலா்கள் அருள்ராஜன் (அஞ்சல் 3), பெரியசாமி (அஞ்சல் 4), கிளைச் செயலா்கள் சிவசங்கரன், குமாரசாமி, ஓய்வூதியா் சங்கச் செயலா் சுப்பையா உள்பட அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கத்தின் 3ஆம் பிரிவு, தபால்காரா், 4ஆம் பிரிவு மற்றும் கிராம அஞ்சல் ஊழியா் சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...