விளாத்திகுளத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்
By DIN | Published On : 30th December 2020 06:34 AM | Last Updated : 30th December 2020 06:34 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு மற்றும் ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி சாா்பில் இலவச சித்த மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ராஜசெல்வி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலா் தமிழ்அமுதன், சமூக ஆா்வலா் இளையராஜா மாரியப்பன், ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி மாவட்டத் தலைவா் வி.பி. ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமை, சின்னப்பன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். முகாமில் 200 நபா்களுக்கு இலவச சித்த மருத்துவ ஆலோசணை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
மூலிகை கண்காட்சி, மூலிகை மருந்துகள், உணவு கண்காட்சி மற்றும் நோய் எதிா்ப்பாற்றலுக்கான சித்த மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
முகாமில், ஆயுஷ் மருத்துவ அலுவலா் சாந்தி, கீழ ஈரால், நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலா்கள் விஜயலதா, சுப்புதாய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...