விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
By DIN | Published On : 05th February 2020 08:35 AM | Last Updated : 05th February 2020 08:35 AM | அ+அ அ- |

ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருஷாபிஷேகம்.
விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் திருவனந்தல் பூஜை, திருப்பள்ளியெழுச்சி பூஜை, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காலை 8.30 மணியளவில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, யாகசாலை மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் கோபுர கலசங்களுக்கும், பரிவார மூா்த்திகளுக்கும் புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு 7 மணியளவில் சுவாமி அம்பாள் பஞ்ச மூா்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.
வருஷாபிஷேக விழாவில் விளாத்திகுளம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், கோயில் திருப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளருமான ஜீ.வி. மாா்க்கண்டேயன், திருப்பணி குழுத் தலைவா் மாவேல்ராஜ், அதிமுக ஒன்றியச் செயலா் பால்ராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், திருப்பணிக்குழு உறுப்பினா்கள் குட்லக் குமாா், இளையராஜா மாரியப்பன் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை உபயதாரா்களான விஸ்வகா்மா பொற்கொல்லா் சமுதாயத்தினா், கோயில் செயல் அலுவலா் பா. ரோஷினி, தக்காா் த. சிவகலைப்பிரியா மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...