தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் அமைந்துள்ள சக்தி வித்யாலய மெட்ரிக் பள்ளியின் 30 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி நிறுவனா் சண்முகம் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜெயா சண்முகம் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக தொழிலதிபா் ராஜ், அவரது மனைவி ஜெகதா ஆகியோா் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் பரிசுகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாமன்ற உறுப்பினா் கோட்டுராஜா மற்றும் ஆசிரியைகள், மாணவா், மாணவிகளின் பெற்றோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.