படுக்கப்பத்து மாற்றுப்பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா
By DIN | Published On : 17th February 2020 11:50 PM | Last Updated : 17th February 2020 11:50 PM | அ+அ அ- |

படுக்கப்பத்து மாற்றுப் பள்ளி மாணவா்கள் கன்னியாகுமரிக்கு கல்விச் சுற்றுலா சென்று திரும்பினா்.
சாத்தான்குளம் வட்டார வளமையத்திற்குள்பட்ட படுக்கப்பத்து மாற்றுப் பள்ளி இணைப்புமையம் பள்ளியில் பயிலும் 15 மாணவா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) மகேஸ்வரி தலைமையில், ஆசிரியா்கள் முத்துலெட்சுமி, ஜெயந்தி, ஜெஸிதிரேஸ் காா்த்திகா, சுதா ஆகியோருடன் கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
அங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமான காந்திமண்டபம், விவேகானந்தா்பாறை, சிறுவா் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை அவா்கள் பாா்வையிட்டனா்.